மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: அரசு மருத்துவமனையில் 42 குழந்தைகள் பலி

Report Print Fathima Fathima in இந்தியா

உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 42 குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் பிஆர்டி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் 70 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 42 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழந்தன, இதில் ஏழு பேர் மூளை வீக்கம் காரணமாகவும், மற்ற குழந்தைகள் பிற காரணங்களினாலும் உயிரிழந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers