பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த செயல்! பலியான சிசு: வெளியானது வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது மருத்துவர்கள் வாக்குவாதம் செய்ததால் குழந்தை மூச்சுத்திணறி பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் உமாத் மருத்துவமனையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதன் போது அறுவை சிசிச்சையில் ஈடுபட்ட இரண்டு மருத்துவர்கள் வாய்வழி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட தவறால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது.

இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers