13 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முருகன்!

Report Print Arbin Arbin in இந்தியா
233Shares
233Shares
lankasrimarket.com

ஜீவ சமாதி அடையும் நோக்கில் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள முருகன் இன்று கைவிட்டுள்ளார்.

வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி, காவல்துறை தலைமை அதிகாரிக்கு மனு அளித்திருந்தார்.

மேலும், இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, கடந்த 18-ம் திகதியிலிருந்து அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், சிறை விதிகளை மீறி அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் டிஜிபி-யின் ஆலோசனை ஆகியவற்றின் காரணமாக தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக முருகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, நீண்ட காலமாக சிறையில் இருப்பதால், தான் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஜீவ சமாதி அடைய தன்னை அனுமதிக்குமாறும் கோரி, சிறைத்துறை அதிகாரிகளிடம் முருகன் மனு அளித்திருந்தார்.

அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, முருகன் தனது உண்ணாவிரதத்தை இன்று கைவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்