கேரளாவில் இஸ்லாம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா
297Shares
297Shares
lankasrimarket.com

கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு அவரது மாமியார் குடும்பத்தினர் குடிக்கும் நீரில் ஆசிட் கலந்து கொடுத்த காரணத்தால் அவரது உள்ளுறுப்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோழிக்கோடு பகுதியை சேர்ந்த Faseena என்பவருக்கும், பெங்களூரை சேர்ந்த Jawed என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் பெங்களூரில் தனது கணவருடன் குடியேறிய Faseena-விடம் மாப்பிள்ளை வீட்டார் ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர்.

திருமணம் நடந்த நாள் முதலே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமையால் Faseena-வை துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று Faseena தனது வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தனது கணவனிடம் தண்ணீர் குடிக்க கேட்டுள்ளார், இதனை கேட்ட கணவரின் அக்கா, உடனடியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அந்த தண்ணீரை குடித்தவுடன் Faseena-விக்கு ரத்தமாக வாந்தி வந்துள்ளது, தண்ணீரில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளதால் அவரது உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிப்படைந்தன.

வலி தாங்க முடியாமல் அழுதுகொண்டிருந்த Faseena-வை கணவர், மாமியார் உட்பட அனைவரும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், அருகில் வசிக்கும் Faseena-வின் உறவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தற்போது Faseena கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் அதிகமான ஆசிட் குடித்துவிட்ட காரணத்தால் உள்ளுறுப்புகள் அதிகமாக சேதமடைந்துள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து Faseena பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்