6 வயதான ஹாசினி எரித்துக் கொலை: குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து

Report Print Deepthi Deepthi in இந்தியா
336Shares
336Shares
lankasrimarket.com

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த என்பவருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமி தனது வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது தஷ்வந்த என்ற வாலிபர் அச்சிறுமியை பலாத்காரம் செய்து கொலை கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதனைத்தொடர்ந்து தஷ்வந்தை பொலிசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தந்தை சேகர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்