செல்போன், மது வாங்குவதற்காக குழந்தையை விற்ற பெற்றோர்

Report Print Raju Raju in இந்தியா

கொலுசு, மது, செல்போன் போன்ற பொருட்களை வாங்குவதற்காக தங்கள் 11 மாத குழந்தையை 23000 ரூபாய்க்கு விற்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பலராம் முகி, இவர் மனைவி சுகுதி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.

இந்நிலையில், சோம்நாத் என்பவரின் ஒரே மகன் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒரே மகனை இழந்த சோம்நாத்தும் அவர் மனைவியும் மன வருத்தத்தில் இருந்து வந்தனர்.

வேறு குழந்தையை தத்தெடுக்க அவர்கள் நினைத்திருந்த வேளையில் தனது உறவினர் மற்றும் அவரின் இன்னொரு நண்பர் மூலம் பலராம் தனது 11 மாத ஆண் குழந்தையை 23000 ரூபாய்க்கு சோம்நாத்திடம் விற்றுள்ளார்.

இதற்கு சுகுதியும் சம்மதித்துள்ளார். அந்த பணத்தில் கொலுசு, புடவை, செல்போன், மது போன்ற பொருட்களை பலராம் வாங்கியுள்ளார்.

பணத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர் குறித்து தகவலறிந்த பொலிசார் அவர்களிடம் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...