சொந்த மகனையே கடத்திய நடிகர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் நடிகர் ஒருவர் தனது மனைவியை பழிவாங்குவதற்காக சொந்த மகனையே கடத்தி நாடகமாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் மியூசிக் ஆல்பங்களில் நடித்து வருபவர் முகமத் ஷாகித்.

இவருக்கு 2 வயது மகன் உள்ளான். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையில் தனது மகனை பார்ப்பதற்கு மனைவி அனுமதிக்காத காரணத்தால், கோபமடைந்த ஷாகித், மனைவியை பழிவாங்க தனது சொந்த மகனையே கடத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக முஸ்கான் ஜூன் 26-ம் தேதி பொலிசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ஷாகித் குழந்தையை கடத்தியுள்ளது தெரிய வந்தது.

இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் பொலிசார் ஷாகித்தை கைது செய்துனர். குழந்தையையும் மீட்டனர்.

விசாரணையின் போது ஷாகித் தலைமறைவாகிய பின்னர் தான் அவர் மேல் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஷாகித் அவரது மகனை கடத்தியுள்ளது தெரிய வந்தது. இதில் அவருக்கு உதவிய அவரது தோழியும் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers