10 வயது சிறுமியை தாயாக்கியது யார்? சோதனையில் திடீர் திருப்பம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க பொலிசார் தொடங்கியுள்ளனர்.

சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமியை, அவரது மாமா பலமுறை பலாத்காரம் செய்த காரணத்தால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

தான் கருவுற்றிருப்பது கூட தெரியாத சிறுமி இருந்திருந்துள்ளார், இதனை அறிந்த பெற்றோர் கருவை கலைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை, இந்நிலையில் சிறுமிக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்துள்ளது. இதில் குழந்தையின் டிஎன்ஏ, குற்றவாளியின் டிஎன்ஏவுடன் பொருத்தவில்லை என சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

குற்றவாளி தற்போது சிறையில் இருக்கிறார், நான் தான் இந்த தவறை செய்தேன் என அவர் தனது தரப்பில் ஒத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமியும் காணொளி மூலம் தனது மாமாவின் பெயரை சொல்லி, அவர்தான் இவ்வாறு செய்தார் என்று நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வெளியான இந்த டிஎன்ஏ சோதனை முடிவால் சிறுமியை தாயாக்கியது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுமி பெற்றெடுத்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரி, குற்றம் சாட்டப்பட்டவரோடு பொருந்தாததால், இந்த சிறுமி பிறரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்