ஊடகங்களில் வெளியான மாணவி ரங்கீலா விவகாரம்: முற்றுப்புள்ளி வைத்த விஜய் ரசிகர் மன்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம் குறித்து விஜய் நற்பணி மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அரியலூரை சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவகல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

இவருக்கு, கன்னியாகுமரி விஜய் ரசிகர்மன்ற நிர்வாகி ஜோஸ்பிரபு கல்விக்கட்டணம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

ஆனால், அவர் பண உதவி செய்யாத காரணத்தால் மாணவியால் மருத்துவ படிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் போனதால் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

அதில், மாணவிக்கு பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிய ஜோஸ்பிரவு என்பவர் விஜய் நண்பணி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இது தெரியாமல் விஜய் நற்பணி இயக்கமே அந்த மாணவியை ஏமாற்றிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மாணவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தளபதியும், அவர்களது ரசிகர்ளும் மாணவி ரங்கீலாவின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு அவருக்கு நிதியுதவி செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...