என் முதல் கணவர் இறந்துட்டாங்க! ஏமாற்றி 2வது திருமணம் செய்த இளம்பெண்

Report Print Fathima Fathima in இந்தியா
1843Shares

தமிழகத்தில் முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறி மற்றொரு வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே மேலகுன்னத்தூரை சேர்ந்த செல்லப்பா மகன் குமார்(வயது 30), இவருக்கும் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

+2வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் தனலட்சுமி இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதன்படி, 2011ல் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனலட்சுமியை சேர்த்து படிக்க வைத்துள்ளார் குமார்.

சொத்தை விற்றும், கடன் வாங்கியும் தனலட்சுமியை படிக்க வைத்துள்ளார், நான்கு ஆண்டுகள் படித்து நெல்லை திரும்பிய தனலட்சுமி கேரளாவில் ME படிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடன் வாங்கியே படிக்க வைத்ததாகவும், தன்னிடம் பணம் ஏதுமில்லை எனவும் குமார் தெரிவித்துள்ளார்.

அதற்கு என் அம்மா படிக்க வைப்பதாக கூறியிருக்கிறார், நான் கேரளா செல்கிறேன் என கூறியுள்ளார்.

அடிக்கடி குமாரை மட்டும் சந்தித்துள்ளார், ஆறு மாதங்களுக்கு முன் நெல்லை வந்து தன்னுடைய ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

பெயரளவுக்கு செல்போனில் மட்டும் பேசி வந்துள்ளார், இந்நிலையில் நெல்லை வந்த தனலட்சுமியின் உறவுக்கார பெண் குமாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா? இறந்துவிட்டாத கூறி தனலட்சுமி 2-வது திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார்.

அதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் காட்டியுள்ளார், இதனால் மனவேதனை அடைந்த குமார் பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்