ஓடும் ரயிலில் பெண்ணை வெளியே தள்ளிவிட்ட இளைஞர்கள்: நேர்ந்த பரிதாபம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை எண்ணூரில் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் தள்ளிவிட்டதாலையே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சென்னை செண்ட்ரலில் இருந்து புறப்பட்ட ஹவுரா விரைவு ரயில் எண்ணூர் ரயில் நிலையத்தில் வந்தபோது அதில் ஏறுவதற்கு வடமாநில பெண் ஒருவர் முயன்றுள்ளார்.

ஆனால் படியில் நின்று பயணித்த ஒருவர், அப்பெண்ணிற்கு வழி விடாமல், அவரை தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்க உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் ரயில் நிலையத்திலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் அங்குள்ள ரயில் பாதுகாப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனிடையே தள்ளிவிட்டதாக கூறப்படும் அசாம் மாநில இளைஞரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers