மகனை வெட்டிக்கொன்ற தாய்: அதிர்ச்சி காரணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீராச்சாமி என்பவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

வீராச்சாமி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதால் இவரது குழந்தைகளை வீராச்சாமியின் தாய் மாரியம்மாள் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த வீராச்சாமி தனது மகளிடம் தவறாக நடந்துகொண்டார்.

இதனால், வீராச்சாமிக்கும் மாரியம்மாளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதில் தனது பேத்தியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வீராச்சாமியின் கையில் அறுவாளை பிடிங்கி, அவரின் தலையிலும் கழுத்திலும் வெட்டியதில் வீராச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகனை வெட்டிக் கொலை செய்ததாக மாரியம்மாள் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் நிலையத்தினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers