பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்கள்: பள்ளி மாணவன் வடிவமைத்த காலணி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பெண்க‌ளை‌ப் பாதுகாக்கும் நோக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவர் எலக்ட்ரோ ஷு எனும் காலணியை வடிவமைத்துள்ளார்.

ஹைதராபாத்தின் சித்தார்த் மண்டல்(18) என்ற மாணவர் எலக்ட்ரோ ஷு எனும் காலணியை வடிவமைத்துள்ளார். பெண்கள் குற்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த காலணி உதவும் என தெரிவித்துள்ளார்.

ஆற்றலை, மின்சாரமாக மாற்று‌ம் தொ‌ழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணி, பெண்களை தாக்கவரும் எதிரிகள் மீது மின்சாரத்தை பாய்ச்சும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பெண்களுக்கு ஆபத்து நேரிடும்போது அவர்களின் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கும் சிறப்பம்சங்களுடன் இந்த காலணி தயாரிக்க‌ப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers