மேடையில் பலரையும் ஒருமையில் பேசுவது சரியா? சீமான் விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா

மேடைகளில் பலரை பற்றி ஒருமையில் பேசுவது ஏன் என சீமான் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர், மேடைகளில் பலரையும் அவன், இவன் என ஒருமையில் நீங்கள் பேசுவது சரியா என சீமானிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சீமான், நான் அப்படியான கலாச்சாரத்தில் தான் பிறந்து வளர்ந்தவன், எனக்கு நடிக்க தெரியாது.

முருக கடவுளை அப்பனே முருகன் என அன்பின் மிகுதியில் கூறுவது போல தான் இதுவும் என கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் ரஞ்சித்தை அதிகளவில் ஒருமையில் பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் என்னை விட வயதில் சிறியவர் மற்றும் என் தம்பி போன்றவர் என்பதால் அந்த உரிமையில் அப்படி பேசியதாக சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்