சசிகலா குறித்த தகவலை வெளியிட்ட நபர்களுக்கு அடி உதை: கமெராவில் பதிவான காட்சி

Report Print Raju Raju in இந்தியா
641Shares
641Shares
Seylon Bank Promotion

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டது குறித்த தகவலை தெரிவித்தவர்களை சிறை அதிகாரிகள் பலமாக தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு அங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது எனவும், அதற்காக டி.ஜி.பி.க்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது எனவும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா பகிரங்கமாக புகார் கூறினார்.

இதுகுறித்து, கர்நாடக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த நிலையில், விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மீரா சக்சேனா கூறுகையில், பரப்பன அக்ரஹாரா சிறை மற்றும் மற்ற சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் சில கைதிகள் தாக்கப்பட்டது கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலர் மிகவும் பலமாக தாக்கப்பட்டுள்ளனர், இந்த அறிக்கை மாநில அரசுக்கு அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்