அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா
306Shares
306Shares
Promotion

சசிகலா பரோலில் வெளிவந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பேட்டியளித்ததாக கூறப்படும் செல்லூர் ராஜூ, தான் சிலீப்பர் செல் இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா மருத்துவமனைக்கு சென்று கணவர் நடராஜனை தினமும் சந்தித்து வருகிறார், அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா.

தனி மனிதனாக என் மனதில் ஆயிரம் கருத்துகள் இருக்கும், எனக்குள்ளும் வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அமைச்சராக அதை நான் கூறமுடியாது.

அத்தனையும் அடக்கிக் கொண்டு பணியாற்றி வருகிறேன், தற்போது கட்சியை வழிநடத்தும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது என தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேட்டியளித்த டிடிவி தினகரனின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி, மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ என்றும், எங்களின் சிலீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கண்ணீர் மல்க பேசிய செல்லூர் ராஜூ, நான் சிலீப்பர் செல் இல்லை, சசிகலா குறித்து சொன்ன கருத்து தவறாக பெரிதாக்கப்பட்டுள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்