சமூகவலைத்தளங்களை அதிரவைத்த குழந்தையின் சிரிப்பும் பொலிசின் நெகிழ்ச்சியும்

Report Print Santhan in இந்தியா
531Shares
531Shares
lankasrimarket.com

இந்தியாவில் கடத்தப்பட்ட குழந்தை ஒன்றை பொலிசார் மீட்டது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

அது யாருடைய குழந்தை, பொலிசார் எப்படி மீட்டனர் என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் அக்குழந்தையின் பெயர் பைசல்கான் என்றும், ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கும் ஹுமேரா பேகத்தின் நான்கு மாத குழந்தை தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இரவு தனது பெற்றோருடன் பைசல் கான் தூங்கியிருந்த வேளையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டான். காலையில் பார்த்த போது குழந்தை இல்லாததால், பொலிசாரிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்த போது, முகமது முஷ்டக் மற்றும் முகமது யூசுப் என்ற இரண்டு நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.

முகமது கவுஸ் என்பவர் முஷ்டக்கின் உறவினர். அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை இல்லாமல் இல்லாததால், முஷ்டக் கடத்தப்பட்ட இந்த குழந்தையை அவர்களது வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். ஆனால் அவர்களோ பெற்றோர் சம்மதத்துடனே குழந்தையை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர்.

இதனால் முஷ்டக் கடத்தப்பட்ட குழந்தையை யாரிடமாவது கொடுக்க முடிவு செய்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொடுத்துவிடலாம் என்று முயற்சித்த போது, பொலிசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அந்தக் குழந்தையின் சிரிப்பும், தாயுடைய ஆனந்தக் கண்ணீரும் எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்