ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு ஏற்பட்ட நிலை: 7 வருடங்களாக பாடுபட்டேன் என வேதனை

Report Print Santhan in இந்தியா
510Shares
510Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி பணீ நீக்கம் செய்யப்பட்டதால், நான் என்ன பயங்கரவாதியா? என்று அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி(25). விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு மாலுமியாக பணியில் சேர்ந்தார்

இதையடுத்து இவர் கடந்த வருடம் விடுமுறைக்கு சென்று, பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்துள்ளது.

பணி நேரம் போக மற்ற நேரங்களில் சேலை அணிவது, பெண்கள் அணியும் மாடல் உடை அணிவது, சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அங்கு பணிபுரியும் நிர்வாகிகளுக்கு, இவர் மீது சந்தேகம் ஏற்பட, உடனடியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது அவர், விடுமுறைக்காக மும்பை சென்ற போது அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறிய அவர், தனது பெயரை சபி என்று மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மணீஷ் கிரி கப்பற்படை விதிமுறைகளை மீறியதால் அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யபட்டார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், நான் விருப்பபட்டு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பெண்ணாக மாறியது தவறா என்ன?

நான் என்ன திருடனா அல்லது பயங்கரவாதியா?, நான் அப்படி என்ன குற்றம் செய்தேன், நாட்டிற்காக 7 வருடங்கள் பாடுபாட்டுள்ளேன், தனது பணி நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்