கல்லூரி மாணவர்கள் செய்த செயல்: காவல் நிலையத்தில் கதறி அழுத பரிதாபம்

Report Print Santhan in இந்தியா
340Shares
340Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மின்சார இரயிலில் ரகளையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து மற்றும் இரயிலில் தலைவர் யார் என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

மின்சார இரயிலில் தலைவர் யார் என்பது தொடர்பாக இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் சென்னையிலிருந்து நெமிலிச்சேரிக்கு செல்லும் மின்சார இரயிலில் மாணவர்கள் கத்தி, கம்பு, அரிவாள், பட்டாசு என அபாயகரமான பொருட்களுடன் இரயிலில் தொங்கியபடி பொதுமக்களை மிரட்டும் விதமாக பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேர் என்று தெரியவந்ததால், பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மாணவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவர்கள் தங்களை மன்னித்து விடுமாறு கூறி பொலிசாரின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.

ஆனால் மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 வழக்குகளை வழக்கு பதிவு செய்த பொலிசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை காண..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்