தமிழக கோவிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் மாயம்: தேடுதல் வேட்டையில் ரஷ்ய தூதரகம்

Report Print Arbin Arbin in இந்தியா
819Shares
819Shares
lankasrimarket.com

தமிழகத்தின் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்து வந்த ரஷ்ய இளைஞர் தற்போது மாயமான நிலையில் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் மீது ஈர்ப்பு கொண்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்செலின் பெர்ன்கோவ் கடந்த 8-ம் திகதி ரஷ்யாவிலிருந்து இந்தியா சென்றுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக 9-ம் திகதி இரவு 8.15க்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் சென்றுள்ளார்.

இதனிடையே கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது டெபிட் கார்ட் மூலம் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் ஏ.டி.எம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏ.டி.எம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டார்.

கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரத்தில் இரவு முழுக்க வலம் வந்தவர் கடைசியில் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலிலில் படுத்து உறங்கிவிட்டார்.

இதனிடையே கோயில் வாசலில் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை கண்ட அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்கள் அவரை விசாரணை செய்து, சென்னையில் உள்ள தூதரத்துக்கு அனுப்பினார்கள்.

இந்த நிலையில் பிச்சை எடுத்த அந்த ரஷ்ய இளைஞர், ரஷ்ய தூதரகத்துக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இதனால் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரஷ்யத் தூதரகம் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவரைப் பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் இணைந்து அவரை தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்