மகளை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்! தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்

Report Print Fathima Fathima in இந்தியா
456Shares
456Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பெற்ற பிள்ளையை தாங்களே கொலை செய்து விட்டு நாடகமாடிய பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை திருமங்கலத்தின் கிழவனேரி தெருவை சேர்ந்தவர் ஞானவேல், இவரது மனைவி சீதா லட்சுமி.

இவர்களது மகள் அன்னலெட்சுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் திகதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் அன்னலெட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அன்னலெட்சுமி தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்திய போது, அவரது பெற்றோர் தடுமாறி பதிலளித்துள்ளனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், அன்னலெட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் தொடர்ந்து விசாரித்ததில், அன்னலெட்சுமி பெற்றோரே கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

அன்னலெட்சுமியின் பழக்கவழக்கம் பிடிக்காததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இருவரையும் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்