நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்: பைக் ரேஸில் அப்பாவி இளைஞர் பலி

Report Print Fathima Fathima in இந்தியா
483Shares
483Shares
lankasrimarket.com

சென்னையில் பைக் ரேஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் ஏற்படும் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள எம்.எஸ். கோவில் தெருவில் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

200 சிசி திறன் கொண்ட அதிவேகமாக சீறிபாய்ந்ததால் தீபாவளிக்கு ஆடைகள் வாங்க பொது மக்களும், இதர வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சமுற்றனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆர்வமிகுதியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்டனர்.

அப்போது எதிர்திசையில் தன் நண்பருடன் வந்த முகமது ரபிக் என்பவரின் வாகனத்தின் மீது ரேஸில் ஈடுபட்ட பிரதீப் என்பவரின் இருசக்கர வாகனம் பலமாக மோதியது.

இதனால் முகமது ரபிக், அவரது நண்பர் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட பிரதீப் ஆகிய மூவரும் படுகாயமுற்றனர்.

இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மூவரும் சேர்க்கப்பட்ட நிலையில், முகமது ரபிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து காசிமேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்