குடிகார கணவனை திருத்த மனைவியின் அதிர்ச்சி வைத்தியம்

Report Print Fathima Fathima in இந்தியா
382Shares
382Shares
lankasrimarket.com

தமிழகத்தில் குடிகார கணவனை திருத்துவதற்காக மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

திருச்சி புத்தூரை சேர்ந்தவர் குமார், இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி நதியா, இவர்களுக்கு சந்தியா, பிருந்தா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான குமார், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

நதியா எவ்வளவோ கூறியும், குடிப்பழக்கத்தை கைவிடாத குமாரை திருத்த முடிவெடுத்தார்.

இதன்படி கடந்த ஜூலை மாதம் 18ம் திகதி இரு பிள்ளைகளுடன் நதியா வீட்டை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு வீடு திரும்பிய குமார் மனைவி, பிள்ளைகளை காணாது அதிர்ச்சி அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.

உறவினர்களிமும் விசாரித்து பார்த்ததில் அவர்களது இருப்பிடம் தெரியாமல் போனது, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நதியா அவரது தாயார் வீட்டில் இருப்பது தெரியவந்தது, உடனடியாக கரூருக்கு விரைந்த குமார் மனைவியை சமாதானப்படுத்தி பிள்ளைகளையும் அழைத்து வந்துள்ளார்.

இனிமேல் குடிக்கவே மாட்டேன் என சத்தியமும் செய்துள்ளாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்