தீபாவளிக்கு புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

Report Print Kabilan in இந்தியா
305Shares
305Shares
lankasrimarket.com

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இயல்பை விட 29 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

ஆயினும் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையும் வங்க கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் வலுபெற்று ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்க கடலில் புயல் சின்னமாக மாற அதிக வாய்ப்புள்ளதால் பலத்த மழை பொழியும்.

எனவே ஆந்திரா, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் தீபாவளி விற்பனை பாதிக்குமோ என வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்