சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று

Report Print Arbin Arbin in இந்தியா
342Shares
342Shares
lankasrimarket.com

தமிழகம், கர்நாடகா, கேரள வனப்பகுதிகளில் சந்தன மரக் கடத்தில் ஈடுபட்டு வந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்திய வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1972 ஆம் ஆண்டு முதன் முறையாக சந்தன மரக் கடத்தலுக்காக வீரப்பன் கைது செய்யப்படுகிறார். இதனையடுத்து தமிழக பொலிஸ் அதிகாரி சிதம்பரம் என்ற வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவத்தால் வீரப்பன் நாடறிந்த நபராக அறியப்பட்டார்.

1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து வீரப்பனை பிடிக்க தமிழக அரசு தனி அதிரடிப்படை ஒன்றை அமைத்தது. அதேபோல் கர்நாடக அரசும் தனிப்படை ஒன்றை அமைத்தது.

இரு மாநில அதிரடிப்படைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தேடுதல் வேட்டையை நடத்தின. இதில் மலைவாழ் மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வாச்சாத்தி பலாத்கார சம்பவமும் இந்தக் காவல் படையினரால் நிகழ்ந்ததுதான். இதனையடுத்து கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், அவரை 108 நாட்கள் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் தமது சில கோரிக்கைகள் நிறைவேறியதை அடுத்து ராஜ்குமார் பத்திரமாக விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அதிரடிப்படையினரின் வியூகம் அதிரடியாக உச்சத்தை எட்டியது. ஒற்றர்கள் மூலம் வீரப்பனை அடையாளம் கண்டனர் அதிரடிப்படையினர்.

பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக காட்டில் இருந்து வெளியே வரவைத்து இரவோடு இரவாக வீரப்பனை சுட்டுக் கொன்றது விஜய் குமார் தலைமையிலான தமிழக அதிரடிப் படை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்