மயங்கி விழுந்த சிறுவன் மர்ம சாவு: பொலிசார் விசாரணை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் தனியார் காப்பகத்தில் இருந்த பள்ளி சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த தம்பதி ஜாபர்- ஜன்னத் பேகம், குடும்ப சூழல் காரணமாக இவர்களது மகனாக முகமது யூனுஸை நெல்லையில் உள்ள யூசிபியா சமூக சேவை நிறுவனத்தின் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

மாதந்தோறும் நெல்லை சென்று மகனை பார்த்து வரும் ஜன்னத் பேகம், தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்.

காப்பகத்தில் இருந்து கொண்டே அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யூனுஸ்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று யூனுஸ் திடீரென மயங்கி விழுந்தான், உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தானா? மனநல ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தானா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers