கொலை மிரட்டல்: தமிழிசை சௌந்தரராஜன் புகார்

Report Print Kabilan in இந்தியா

மெர்சல் படம் தொடர்பாக பரபரப்பான கருத்தை தெரிவித்த பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தனக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நேற்று மாலை 4 மணி வரையில் என்னை தொலைபேசி தொடர்பு கொண்டு மிரட்டிவருகிறார்கள்.

இது போன்று தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் என்னை விமர்சித்துவருவது தவறான அணுகுமுறையாகும்.

மிரட்டல்களை கண்டு நான் அஞ்சமாட்டேன், மெர்சல் குறித்து எனது கருத்தையே பதிவு செய்தேன், தவறாக எதுவும்பதிவிடவில்லை, இப்போதும் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்