நடிகர் விஷால் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Report Print Fathima Fathima in இந்தியா

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வடபழனியில் உள்ள அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் ஜிஎஸ்டி நுண்ணறிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், ஜிஎஸ்டி வரியை சரியாக செலுத்துகிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் டி.பி.நாகேந்திரகுமார், ராஜசேகர், உள்ளிட்டோர் தலைமையில் சோதனை நடைபெறுவதாகவும், அதிகாரிகள் கேட்டதன் பேரில் விஷால் தரப்பில் சரிபார்க்க ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக விஷால் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த ரெய்டு அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்