ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: வெளியே குதித்த 8-ம் வகுப்பு மாணவி

Report Print Arbin Arbin in இந்தியா

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலியல் தொல்லைக்கு பயந்து ஓடும் ரெயிலில் இருந்து 8-ம் வகுப்பு மாணவி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் 8-ம் வகுப்பு மாணவி டியூசன் முடித்து விட்டு கல்யானில் உள்ள தனது குடியிருப்புக்கு ரெயிலில் சென்றுள்ளார். குறித்த மாணவி பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சத்திரபதி சிவாஜி நிலையத்திலிருந்து ரெயில் புறப்பட்டு சென்ற போது பெண்கள் பெட்டியில் சிறுமி தனியாக இருப்பதை கண்ட ஒருவர் தாவி உள்ளே ஏறினார்.

இதை கண்ட சிறுமி குறித்த நபரை கீழே இறங்க சொல்வதற்குள் அந்த நபர் சிறுமியை நோக்கி நடந்த வந்துள்ளார்.

இதனால் மிகவும் பயந்து போன சிறுமி ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக நகர முடியாமல் தவித்த அவரை ரயில் நிலைய ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கமெரா பதிவேட்டில் அந்த நபரின் புகைப்படத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்