20 பெண்களை கற்பழித்து கொலை செய்த வழக்கு: தூக்கு தண்டனையிலிருந்து மோகன் விடுதலை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 20 பெண்களை கற்பழித்து கொலை செய்த சயனைடு மோகன் என்பவரை தூக்கு தண்டனை வழக்கு ஒன்றில் இருந்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆசிரியரான இவர், கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து 2009-ஆம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், மோகன் குமார் 32 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார்.

இதில் 20 பெண்களை கற்பழித்து கொலை செய்ததற்கான ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணுடனும் வெவ்வேறு பெயர்களில் பேசி அவர்களின் செல்போன் எண்களை மோகன்குமார் வாங்கியுள்ளார்.

பின்னர், செல்போன் பேச்சால் பெண்களை மயக்கும் அவர், பெண்களை தனியார் ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரிக்கும் பெண்களை அவர் கொலை செய்துள்ளார்.

அதாவது, பேருந்து நிலைய கழிவறைக்குள் பெண்களை அழைத்து சென்று கர்ப்பம் அடையாமல் இருக்க கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்து கொள்ளும்படி அவர் கூறியுள்ளார். அந்த மாத்திரைகளில் சயனைடு தடவி கொடுத்து பெண்களை கொலை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இப்படி பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளதால், அவர் சயனைடு மோகன் என்றழைக்கப்பட்டார்.

இதில் சுள்ளியா பகுதியைச் சேர்ந்த சுனந்தா, வம்படபதவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பாரிமார் பகுதியைச் சேர்ந்த அனிதா ஆகிய பெண்களை சயனைடு கொடுத்து கொன்றது நிரூபிக்கப்பட்டதால் 2013-ம் ஆண்டு மோகன் குமாருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மோகன் கார்நாடக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இதில் கடந்த 12–ஆம் திகதி அனிதாவின் வழக்கு சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து லீலாவது கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், லீலாவதியை கற்பழித்து, நகைகளை கொள்ளையடித்து கொன்ற வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து மோகனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இருப்பினும் அவருக்கு வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைகள் கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers