நடிகர் விக்ரம் மகள் திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோபாலபுர இல்லத்தில் தனது கொள்ளுப்பேரனுக்கு திமுக தலைவர் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் நவம்பர் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கோபாலபுர இல்லத்தில் தலைவர் கருணாநிதி முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், கலைஞர் அவர்கள் உடல்நலம் தேறி மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்