தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழை பொழியும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது, இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிவிட்டன.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 28ம் திகதி தென்மேற்கு வங்ககடல் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவான.

இது இலங்கையையொட்டி நிலை கொண்டுள்ளதால் வடகிழக்கு காற்று வலுப்பெற்று விளங்குகிறது, ஐந்து நாட்களுக்கு கனமழை பொழியும்.

மக்களின் வசதிக்காக வானிலை மைய இணையதளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவும், வருகிற 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை நிலவரமும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும், மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளும் வண்ணம் தகவல்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்