காதல் திருமணம் செய்த மூன்றே நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Report Print Fathima Fathima in இந்தியா

திருச்சியில் மூதாட்டியை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்தவர் முத்துரத்தினாவதி(வயது 80), இவரது வீட்டில் திவ்யபிரியா என்ற பெண் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்த திவ்யபிரியாவுக்கும், முத்துரத்தினாவதிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 2ம் திகதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் முத்துரத்தினாவதி மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கே திவ்யபிரியா போன் பேசுவதை பார்த்தவுடன், அடிக்கடி போனில் பேசுகிறாய், உன் அம்மாவிடம் சொல்லித் தருகிறேன் என கூறிவிட்டு கீழே வந்துள்ளார்.

இதில் கோபமடைந்த திவ்யபிரியா அருகிலிருந்த இரும்பு கம்பியால் மூதாட்டியை குத்திக் கொலை செய்தார்.

இதிலிருந்து தப்பிக்கு அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி சாக்கடையில் வீசினார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பிய உறவினர்களிடம், கொள்ளையர்கள் முத்துரத்தினாவதியை கொன்றுவிட்டு நகைகளை திருடிச் சென்றதாக கூறினார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய கோட்டை குற்றப்பிரிவு பொலிசார் சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்த போது திவ்யபிரியா குற்றவாளி என தெரியவந்தது.

இவரை கைது செய்த பொலிசார் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 10 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம், நகைகளை கொள்ளையடித்ததற்காக 7 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தும், தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டீன் தீர்ப்பு கூறினார்.

இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...