கொட்டும் மழை வெள்ளத்தில் பிணத்தை இழுத்துச் சென்ற கிராம மக்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் நபர் மூழ்கும் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் ஆற்றில் கயிறு கட்டி பிணத்தை கிராம மக்கள் இழுத்துச் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்றவநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஐயம்மாள் என்ற மூதாட்டி இன்று இறந்துபோனார்.

சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் யாராவது இறந்துபோனால் ஆற்றை கடந்து கீழமருதாந்தநல்லூர் இடுகாட்டில் தான் அடக்கம் செய்வது வழக்கம்.

மழை காரணமாக இன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓட மிகவும் சிரமப்பட்டு ஆற்றில் மூழ்கியபடி கயிறை கட்டிக் கொண்டு பிணத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.

இங்கு ஒரு பாலம் கட்ட வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடந்தபாடில்லை, காலம் காலமாக இந்த கொடுமையை அனுபவித்து வருகிறோம் என்கிறார் கிராமவாசி ஒருவர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...