பல்டி அடித்த சாட்சிகள்: நடிகை கடத்தல் வழக்கில் தப்புகிறார் திலீப்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் திலீப்புக்கு எதிரான வழக்கில் சாட்சிகள் பல்டி அடிப்பதால் அவர் மீதான பொலிஸ் பிடி தளர்ந்து வருகிறது.

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில் சாட்சிகள் பல்டி அடிப்பதால் பொலிசார் திணறி வருகின்றனர்.

நடிகையை காரில் கடத்திய பின் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், நடிகை காவ்யா மாதவன் நடத்தும் ஜவுளிக்கடைக்கு வந்ததாக அங்குள்ள ஊழியர் பொலிசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

ஆனால் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, பல்சர் சுனில் வந்ததாக தனக்கு நினைவில்லை என ஊழியர் மாற்றி கூறியுள்ளார்.

பொலிசார் இதுகுறித்து விசாரிக்கையில், அந்த சாட்சியின் பேரனின் அலைபேசிக்கு காவ்யா மாதவனின் ஓட்டுனர் 41 முறை அழைத்தது தெரியவந்தது.

வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட இந்த ஊழியர் பல்டி அடித்ததால், திலீப்பின் மீதான பிடி தளருவதாக கருதப்படுகிறது.

இதனிடையில் பல்டி அடிக்கும் சாட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிசார் ஆலோசித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...