ஆபசாமாக பேசும் தலைமை ஆசிரியர்: கண்ணீர் மல்க பேட்டி அளித்த பள்ளி மாணவிகள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆபசமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் அங்கிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை பார்ப்பதற்கு சென்றுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஏன் கலெக்டர் அலுவலகம் வரை வந்துள்ளனர் என்று கேட்டறிந்த போது, அதில் இருந்த மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு தங்கள் பள்ளிக்கு புதிதாக ஜெயச்சந்திரன் என்ற தலைமையாசிரியர் வந்ததாகவும், அவர் எங்கள் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளை கண்டபடி திட்டுவார், எங்களைக் கண்டால் அவருக்கு பிடிக்காது, வெளிப்படையாகச் ஜாதிப்பெயரைச் சொல்லி திட்டுவார் என்றும் ஆரம்பித்தார்.

ஏன் சார் இப்படி பேசுகிறீர்கள் என்று எதிர்த்து கேட்டால், அப்படித்தான் திட்டுவேன் என்றும் இதை மனதில் வைத்துக் கொண்டு, ஏன் முடி இப்படி இருக்கிறது, சட்டை ஒழுங்காக போடமாட்டாயா என்று எங்களை அடிப்பார், இப்படி தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் அதிகரித்து கொண்டே சென்றதால், பொறுமை இழந்த நாங்கள் கலெக்டர் அலுவகலத்தில் இது குறித்து மனு அளிக்க வந்துள்ளதாக அந்த மாணவன் கூறினார்.

மாணவனைத் தொடர்ந்து மாணவி ஒருவர், மாணவர்கள் கூட பரவாயில்லை அவர்கள் அடி வாங்கிக் கொண்டு இருந்துவிடுவார்கள்.

ஆனால் அவர் மாணவிகளை ஆபசமாக திட்டுவார் மற்றும் ஆபசமாக பேசுவார், திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவியின் பெயர் சொல்லி வெளியே வரச் சொல்வார்.

வெளியே வந்தவுடன் வாடி போடி என்று பேச ஆரம்பிப்பார். கொஞ்ச நேரத்தில் கெட்டவார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார்.

நாங்கள் எல்லாம் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் பெற்றோர் கூலி வேலை செய்துதான் எங்களைப் படிக்கவைக்கிறார்கள்.

இந்த விடயம் எங்கள் வீட்டுக்குத் தெரிந்தால் எங்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்று மாணவி கண்ணீருடன் கூறினார்.

இது குறித்து தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன் கூறிய போது, ஆசிரியர்கள் சிலர் திட்டமிட்டே இந்த மாணவர்களை இங்கு அனுப்பியுள்ளனர்.

என் மேல் எந்த தவறும் இல்லை. பள்ளிக்கு வரும் போது நல்ல உடையும், நன்றாக முடி வெட்டிக்கொண்டும் வர வேண்டும் என்று தான் நான் சொல்வேன்.

நான் இந்த பள்ளிக்கு வந்த பிறகு ஒழுக்கத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன். இதை பிடிக்காத சில ஆசிரியர்கள் தான் மாணவர்களை தூண்டிவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...