10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை: கதறி அழுத குற்றவாளியின் மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சண்டிகரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சண்டிகரில் உள்ள நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை மருத்துவக் காரணங்களுக்காக அச்சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி மறுத்ததால், ஆகஸ்டில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மூத்த மாமா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரியுடன் சிசுவின் டி.என்.ஏ மாதிரி ஒத்துப் போகாததால், மீண்டும் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவரது இளைய மாமா கைது செய்யப்பட்டார். அவர்தான் சிசுவின் தந்தை என்பது பின்னர் நடந்த டி.என்.ஏ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

தீர்ப்பு வழங்கிய மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பூனம் ஜோஷி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் இருவரும் தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

தண்டனை விவரங்களைக் கேட்ட குற்றவாளி ஒருவரின் மனைவி நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers