பொலிசார் கண்முன்னே நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

Report Print Kabilan in இந்தியா

மும்பையின் தானே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே பகுதியில் 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து, அங்குள்ள பொருட்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அடித்து, மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இரும்பு ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் எச்.என்.காரூட் மற்றும் எஸ்.வி.கான்சேவ் என்ற பொலிசார் கண்முன்னே அரங்கேறியுள்ளது.

ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ள வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

வீடியோவை காண

இதன் அடிப்படையில் குறித்த பொலிசார் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்