தேர்வில் காப்பி அடித்து சிக்கிய சபீர்: மனைவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Report Print Fathima Fathima in இந்தியா

ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்து வசமாக சிக்கிக் கொண்ட சபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ்க்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த சபீர் கரீம், நெல்லை மாவட்டத்தில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 30ம் திகதி ஐஏஎஸ் தேர்வு எழுதிய சபீர் காப்பி அடித்தது தெரியவந்தது, இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருக்கு உதவி செய்த சபீரின் மனைவி ஜாய்சையும் கைது செய்த பொலிசார், ஒன்றரை வயது குழந்தையுடன் எழும்பூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்