உயிருக்கு போராடிய தாயையும், சேயையும் தூக்கிக் கொண்டு ஓடிய மருத்துவர்

Report Print Fathima Fathima in இந்தியா

ஒடிசாவில் சாலை வசதி இல்லாததால் உயிருக்கு போராடிய கர்ப்பணி பெண்ணை மருத்துவர்கள் 8 கி.மீ தூரம் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர்.

ஒடிசாவின் மால்கங்காரி பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வர முடியாது, எனவே ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையை சேர்ந்த இளம் மருத்துவர் தனது உதவியாளருடன் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளார்.

ரத்தப் போக்கு நிற்காததால் தாயையும், குழந்தையையும் கயிற்று கட்டிலில் வைத்து 8 கி.மீ தூரம் வரை தூக்கி சென்றுள்ளனர்.

இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers