நான் பொறுக்கி தான்: கொந்தளித்த கமல்

Report Print Kabilan in இந்தியா

நான் பொறுக்கிதான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானலும் பொறுக்குவேன் என தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில், தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், நான் விவசாயி மகன் இல்லை என்றாலும், விவசாயியின் மருமகன். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை நாம் மறந்து விட்டோம்.

விவசாயிகள் தான் நாட்டின் எஜமானர்கள், நான் அவர்களுக்கு நல்ல ஊக்கியாக இருப்பேன்.

நான் இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன், கடந்த 50 ஆண்டுகளாக தூங்கிய நாம் இப்போது விழித்துக் கொள்ளும் நேரம் இது.

தமிழக விவசாயிகளுக்கு மட்டும் தான் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, எனவே நான் விவசாயிகளுக்கு ஒரு அணில் போல உதவுவேன்.

டெல்லியில் ஒருவர் என்னை பொறுக்கி என்று திட்டினார். ஆமாம், நான் பொறுக்கி தான்.

அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்