சிறுமிகளை பாரில் நடனமாடச் செய்த தம்பதி கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துவந்து, மேற்கு வங்க சிறுமிகளை பாரில் நடனமாடச் செய்த தம்பதியினரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுபிஸ்- சிம்ரன் தம்பதியினர், சிறுமிகள் இருவரையும் அவர்களின் வீட்டில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.

அவர்களின் பெற்றோரிடம் ஜெய்பூரில் திருமண வரவேற்புக்கு நிற்பதற்காகப் பெண்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜெய்பூருக்கு அழைத்துச் செல்லாமல், சிலிகுரிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.

தாஸுக்குச் சொந்தமான நடன விடுதி சிலிகுரியில் உள்ள காஸ்மோஸ் மாலில் உள்ளது. அங்கே சிறுமிகள் இருவரையும் நடனமாடும்படி தாஸ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் மாதம் ரூ.10,000 சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தாஸ் எடுத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.

இதனால் சிறுமிகள் நடன விடுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தம்பதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்