மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டுப்பிடித்த கணவன்: செய்த விபரீத செயல்

Report Print Raju Raju in இந்தியா
411Shares

மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சரதா கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மோட் சிங் தன்வார் (40) என்பவரின் மனைவி சாந்திபாய்க்கு, அவரின் மகனின் மாமனாருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இது குறித்து தன்வாருக்கு தெரியவர மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். திங்கள் மாலை கணவன் - மனைவிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த தன்வார் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தன்வார் நேற்றிரவு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தன்வாரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்