நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்த பேரவலம்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா
669Shares

பீகார் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

அதற்கு உதாரணமான சம்பவம் தற்போது நடந்துள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் வசித்து வந்த ராம் துலரி தேவி என்பவர் தனது வீட்டில் வசித்து வரும் அருண் சிங் என்பவர் தனக்கு வாடகை பாக்கி தரவில்லை என பஞ்சாயத்தை நாடியுள்ளார்.

பஞ்சாயத்தில் , அருண் சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால், ராம் துலரி தேவியை நாக்கால் தரையை சுத்தம் செய்ய வைத்து பஞ்சாயத்தார் கொடூர தண்டனை அளித்துள்ளனர்.

இது குறித்து ராம் துலரி தேவி அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் பீகார் மாநிலம் பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்