இந்தியாவின் சென்னை மாநகரம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் முறையாக இணைந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், இலக்கியம், இசை முதலிய ஏழு பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நகரங்களை ‘படைப்பாற்றல் நகரங்கள்’ எனும் அடைமொழியுடன் யுனொஸ்கோ அமைப்பு சிறப்பிக்கிறது.
இந்நிலையில் பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பின் மூலம் யுனெஸ்கோ சென்னையை கௌரவிக்கும் வகையில், படைப்பாற்றல் நகரங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவிலும், வாரணாசி நகரம் பாரம்பரிய இசைக்காவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
உலகில் உள்ள நாடுகளில் 72 நாடுகளின் 180 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ‘பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காக சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை நகரம் பாரம்பரிய இசைக்கு அளித்துள்ள பங்களிப்பு விலை மதிப்பற்றது’ எனத் தெரிவித்துள்ளார்.