மாயமான 3 வயது குழந்தை குப்பைமேட்டில் சடலமாக மீட்பு

Report Print Arbin Arbin in இந்தியா
168Shares

சென்னை அருகே வீட்டிலிருந்து மாயமான மூன்று வயது பெண்குழந்தை, குப்பைமேட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பழக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், காவ்யா என்ற 3வயது பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், ஜெயந்தி தனது பெண் குழந்தை காவ்யாவை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாக கதவை தாழிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்,

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தநிலையில், குழந்தை காவ்யாவை காணவில்லை.

இதனையடுத்து, வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்களும் அக்கம்பக்கம் எங்கும் தேடியும், குழந்தையை மீட்க முடியவில்லை என்பதால், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அதிகாலையில், வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் குழந்தை காவ்யா சடலமாக காணப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையின் சடலம், வாயில் நுரை வடிந்த நிலையிலும், கன்னத்தில் காயத்துடனும் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசன் மனைவி ஜெயந்திக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் தேவி என்பவருக்கும் முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது,

குழந்தையை காணவில்லை என்று தேவியிடம் ஜெயந்தி விசாரிக்கும் போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் தேவி மற்றும் அவரது கணவரையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தங்களுக்கு பக்கத்து வீட்டு தேவியின் மீது தான் சந்தேகம் உள்ளதாகவும், இருப்பினும் பொலிசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் எனவும், காவ்யாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்