தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் மும்பை நகரில் Brihanmumbai Electric Supply and Transport (BEST) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெண்கள் உட்பட 12 பேர் தசரா பண்டிகையை கொண்டாடும் விதத்தில் அலுவலகத்தில் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனம் ஆடியுள்ளார்கள்.
நிறுவனத்தில் பணிபுரியும் பிரபல இந்தி நடிகை மாதவி ஜுவேகரும் நடனம் ஆடியுள்ளார். நடனம் ஆடியதோடு ரூபாய் நோட்டுகளையும் ஊழியர்கள் தூக்கி வீசியுள்ளனர்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டதில் வைரலாகியுள்ளது.
BEST நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊழியர்களுக்கு சரியான சம்பளம் தரப்படாமல் இருக்கும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது சம்மந்தமாக ஊழியர்களிடம் விசாரணை நடத்த BEST நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூறிய நடிகை மாதவி, நாங்கள் ஆடிய நடனத்தில் தவறில்லை, அதே போல அந்தரத்தில் வீசியது போலி ரூபாய் நோட்டுக்களே தவிர நிஜ ரூபாய் நோட்டுகள் கிடையாது என கூறியுள்ளார்.
ஊழியர்கள் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடினார்களா, அவர்கள் பயன்படுத்தியது நிஜ ரூபாய் நோட்டுகளா என்பது குறித்து BEST நிறுவனம் விரிவாக விசாரணை நடத்தவுள்ளது.
Video of BEST staffers dancing and throwing ‘cash’ goes viral pic.twitter.com/Tn64jXF1r3
— TIMES NOW (@TimesNow) November 9, 2017