ஐடி ரெய்டின் போது டிடிவி தினகரன் வீட்டில் நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

சசிகலா, டிடிவி தினகரன் உட்பட அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடையாறில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் கோ பூஜை நடத்தினார்.

பசு, கன்றுக்கு தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா வாழைப்பழங்களை கொடுத்தனர்.

அவர் கூறுகையில், என்னுடைய வீட்டில் சோதனை ஏதும் நடக்கவில்லை, யாரோ அதிகாரி ஒருவர் வந்து சிறிது நேரத்தில் சென்று விட்டார்.

ஜெயா டிவி அலுவலகத்தில் தான் சோதனை நடைபெறுகிறது, புதுச்சேரியில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன், என்னையும், சசிகலாவையும் ஒடுக்க சதி நடக்கிறது, எம்.ஜிஆர் மறைவுக்கு பின்னரும் ஜெயலலிதாவுக்கு இதுதான் நடந்தது.

30 ஆண்டுகளாக இதையெல்லாம் பார்த்துவிட்டோம் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்