ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? டென்ஷனான சி.ஆர்.சரஸ்வதி

Report Print Kabilan in இந்தியா
98Shares

ஜெயா மற்றும் நமது எம்.ஜி.ஆர் தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜெயலலிதா இருந்திருந்தால் சோதனைக்கு வந்திருப்பார்களா என தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயா மற்றும் நமது எம்.ஜி.ஆர் தொலைக்காட்சி அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் வருமான வரி சோதனை நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும். இந்த இரு தொலைக்காட்சிகளும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் இருந்தவை.

அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்படி சோதனைக்கு வந்திருப்பார்களா? இந்த சோதனையானது சசிகலாவிற்கும், தினகரனுக்கும் மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால் உண்டான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி நிறுவனங்களை எடப்பாடி தரப்பினர் கைப்பற்றுவதற்காகவும் தான் நடத்தப்படுகிறது. இந்த பிரச்சனையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்