பெங்களூரில் இரு குழந்தைகள் கண்முன்னே சக ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் எச்.ஏ.எல் நெல்லுருபுரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா(வயது 26), இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
உணவகத்தில் வேலை பார்த்து வந்த சுமித்ராவுக்கு, சக ஊழியரான மகந்தேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
தன்னுடன் தகாத உறவு வைக்கவில்லை என்றால் குழந்தைகளை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று சுமித்ராவின் வீட்டுக்கு வந்த மகந்தேஷ் குழந்தைகள் முன்பு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இவருடன் சதீஷ் என்பவரும் வந்துள்ளார், மறுப்பு தெரிவித்த சுமித்ராவை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுமித்ரா அன்றிரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சுமித்ராவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் மகந்தேஷ் மற்றும் சதீஷை தேடி வருகின்றனர்.